Tamil Library/நூலகம் and Classes!
நூலகம்/Library
1. தமிழ் இணைய கல்விக்கழகம்
இணைய வழியில் தமிழ் கற்க விரும்பும் மாணவர்களுக்காக தமிழக அரசாங்கம் நடத்திவரும் இணையப் பல்கலைக்கழகம் இது , மழலைக்கல்வி முதல் மேற்பட்டயம் வரையான கற்கைநெறிகளை இங்கு கற்கமுடியும் . ஆர்வமுள்ள மாணவர்கள் பொருத்தமான கற்கை நெறிகளை தெரிவுசெய்து படிப்பதன் மூலம் தமிழக அரசின் சான்றிதழையும் பெற்றுக்கொள்ளலாம்.
இணைப்பு : http://www.tamilvu.org
2. தமிழ் இணையம் - மின்நூலகம்
பழந்தமிழ் இலக்கியங்கள் முதல் தற்கால நூல்கள் வரை அனைத்தையும் pdf வடிவில் படிக்கும் வகையில் உருவாக்கப்பட்டுள்ள மின் நூலகம் இது. இதுவும் தமிழக அரசினால் நடத்தப்படுகிறது.
இணைப்பு : https://www.tamildigitallibrary.in
3. நூலகம்
இலங்கைத் தமிழ் பேசும் சமூகங்களின் எழுத்தாவணங்களை எண்ணிமப்படுத்தி ஆவணப்படுத்தும் செயற்பாடுகளை ஊக்குவிப்பதோடு, தகவல் வளங்களையும் அறிவுச்சேகரங்களையும் ஒழுங்குபடுத்தி அனைவருக்கும் கிடைக்கச் செய்துவரும் இலாப நோக்கற்ற ஒரு தன்னார்வ முயற்சி.
இணைப்பு : http://www.noolaham.org
4. ஆவணகம்
தமிழ் பேசும் சமூகங்கள் தொடர்பான புகைப்படங்கள், ஒலி-நிகழ்பட ஆவணங்கள் (Audio-Visual materials), அலுவலக ஆவணங்கள் (சொற்செயலி, அட்டவணை, நிகழ்த்தல்), வலைத்தளங்கள் போன்ற பல்லூடகங்களை பாதுகாத்துப் பகிர்வதற்கான தளமகாக இது வடிவமைக்ப்பட்டு வருகின்றது.
தங்களிடமுள்ள பாதுகாக்கப்படவேண்டியவை என்று கருதும் ஆவணங்களையும் இங்கு பதிவேற்றிப்பாதுகாக்க முடியும். இதுவரை 27865 ஆவணங்கள் சேகரிக்கப்பட்டுள்ளன.
இணைப்பு : http://aavanaham.org